கசியும் தமிழகமும் ஒரு பாரம்பரிய சம்பந்தம்

Kasi-Tamilagam A Traditional Connect (Tamil)

காசி என்றால் பிரகாசம் என்று பொருள். காசியின் பிரகாசம் அனைத்து திசைகளிலும் பரவியிருக்கிறது. காசியைப் போலவே தொன்மையிலும் ஞானத்திலும் பண்பாட்டிலும் ஒளிவீசிப் பிரகாசிக்கும் தமிழகத்திலும் காசியின் பிரகாசம் நன்கு புலனாகும்படியான தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இரு பகுதிகளுக்கு இடையிலான பரிமாற்றங்கள் நீண்ட நெடிய, அழுத்தமான பாரம்பரியத்தைக் கொண்டது. ஞானம், ஆன்மிகம், பட்டு இழைகள், கலைகள், செய்யுள்கள், கவிதை, சைவ தர்மம் என பல அம்சங்களில் நெருங்கிய பந்தம் இருந்திருக்கிறது. இரு பகுதிகளும் பல விஷயங்களைப் பரஸ்பரம் பகிர்ந்துகொண்டிருக்கின்றன.

காசி நகரத்துக்கும் தமிழகத்துக்குமான இந்தப் பாரம்பரிய பந்தமானது காலங்களைக் கடந்தது.

இந்தப் புத்தகமும் முகப்பும் அந்த பந்தத்தை வெளிச்சமிட்டுக் காட்டுவதற்கான எளிய முயற்சியே.

Released by Honourable Prime Minister Shri.Narendra Modi on 19th Nov 2022 at Varanasi during the inauguration of the Kashi Tamil Sangamam.

TOP