ஸ்ரீ ராமருக்கு அயோத்தி எப்படி ஜென்மபூமியோ; அவ்வாறு தமிழகம் கர்மபூமி.
தமிழகத்தில் நடந்த ராமாயணத்தின் குறிப்பிடத்தக்க நிகழ்வுகள் இதை உறுதிப்படுத்துகின்றன. மேலும் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகத் தமிழகம் அந்த நினைவுகளை உயிரினும் மேலாகப் போற்றிப் பாதுகாத்து வருகிறது.
தமிழகத்தில் இருக்கும் கோயில்கள், கலை வடிவங்கள் மற்றும் மரபுகள் எல்லாம் அந்த பந்தத்தை பல ஆயிரம் ஆண்டுகளாகப் போற்றிப் பாதுகாத்துவந்திருக்கின்றன. நிகழ்காலத்திலும் எதிர்காலத்திலும் தமிழகத்தை ஸ்ரீ ராமருடன் இணைபிரியாத வகையில் பிணைக்கவும் செய்கின்றன.
இந்த நூல் இந்த ஆருயிர் பந்தத்தை அழுத்தமாக எடுத்துக்காட்டுகிறது.