தமிழன்னையின் பட்டாடையில் மின்னும் செளராஷ்டிர நூலிழைகள். ஒரு பட்டு நெசவு சமூகம், தமிழன்னையின் பட்டாடையில்மென்மையாகவும் இடைவெளியின்றியும் தன்னையும் நெய்துள்ளது.
செளராஷ்டிரர்கள் ஏன், எப்படி தமிழகத்துக்கு வந்தார்கள்? அவர்களுடனான சம்பந்தம் எப்படி இவ்வளவு பின்னிப் பிணைந்த பந்தமாக மாறியது?
நாம் மேலும் ஆராய்ந்தால், இந்த பந்தத்தின் இழைகள் பட்டாடையோடு நிற்காமல், கால வெளியிலும் புவியியல் வெளியிலும் ஆதி காலம் தொட்டு அறுபடாமல் நீள்வதை அறிந்துகொள்ளமுடியும்.
இந்தப் புத்தகம் சௌராஷ்டிராவுக்கும் தமிழகத்துக்கும் இடையே உள்ள இந்த பல்லாயிரம் ஆண்டு பழமையான பந்தத்தை வெவ்வேறு காலங்கள் மற்றும் பரிமாணங்களில் கண்டறிந்து எடுத்துக்காட்டும் முயற்சி.